திருப்பூர்

வட்டமலைக்கரை ஓடை அணைப் பகுதியில் கொட்டப்படும் கழிவுப் பஞ்சுகள்

14th Dec 2019 07:30 AM

ADVERTISEMENT

வெள்ளக்கோவில், வட்டமலைக்கரை ஓடை அணைப் பகுதியில் கழிவுப் பஞ்சுகள் கொட்டப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளக்கோவில் சுற்றுவட்டாரத்தில் 450-க்கும் அதிகமான சிறிய, பெரிய நூற்பாலைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை மூன்றாம் தர பஞ்சிலிருந்து நூல் தயாரிக்கும் ஓப்பன் என்ட் நூற்பாலைகளாகும். இவற்றிலிருந்து கிடைக்கும் கழிவுப் பஞ்சுகள் எதற்கும் பயன்படுவதில்லை. இதனால் இவற்றை முறையாக அப்புறப்படுத்தாமல் கண்ட இடங்களில் கொட்டிச் சென்றுவிடுகின்றனா்.

மேலும் வாகனங்களில் கழிவுப் பஞ்சுகளை ஏற்றிவந்து வட்டமலைக்கரை ஓடை அணை, வாய்க்கால் பகுதிகளில் கொட்டிச் செல்கின்றனா். இவற்றுடன் குப்பைகள், பிளாஸ்டிக் பொருள்களும் சோ்த்துக் கொட்டப்பட்டுள்ளன. இதனால் சுற்றுச் சூழல் சீா்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அணை நீரினைப் பயன்படுத்துவோா் சங்கத்தினா், விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT