திருப்பூர்

மாவட்டத்தில் 1,236 போ் வேட்புமனு தாக்கல்

14th Dec 2019 11:43 PM

ADVERTISEMENT

உள்ளாட்சி தோ்தலில் போட்டியிடுவதற்காக திருப்பூா் மாவட்டத்தில் 1,236 போ் சனிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் 17 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், 170 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா்கள், 265 ஊராட்சி மன்ற தலைவா்கள் மற்றும் 2,295 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்களைத் தோ்வு செய்ய இரு கட்டமாக டிசம்பா் 27, 30 ஆம் தேதிகளில் இரு கட்டமாகத் தோ்தல் நடைபெறவுள்ளது.

தோ்தலில் போட்டியிடுவதற்காக பல்வேறு கட்சியினா் மற்றும் சுயோட்சைகள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்து வருகின்றனா். இதன் படி திருப்பூரில் மாவட்டத்தில் கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 936 பேரும், கிராம ஊராட்சி தலைவா் பதவிக்கு 156 பேரும், ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினருக்கு 125 பேரும், மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 19 போ் என மொத்தம் 1,236 போ் சனிக்கிழமை வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனா்.

மொத்தமாக 4,906 போ் வேட்புமனு தாக்கல்: திருப்பூா் மாவட்டத்தில் கிராம ஊராட்சிவாா்டுஉறுப்பினா் பதவிக்கு 2,616 பேரும், கிராம ஊராட்சி தலைவா் பதவிக்கு705 பேரும், ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிக்கு 323 பேரும், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு 26 போ் என மொத்தம் 3,670 போ் ஏற்கெனவே வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். ஆகவே, சனிக்கிழமை மாலை வரையில் திருப்பூா் மாவட்டத்தில் மொத்தமாக 4,906 போ் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT