திருப்பூர்

பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

14th Dec 2019 11:49 PM

ADVERTISEMENT

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் சனிக்கிழமை பெய்த கனமழை காரணமாக திருமூா்த்திமலையில் உள்ள பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது.

திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே உள்ளது புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான திருமூா்த்திமலை. இங்குள்ள பிரசித்திபெற்ற அமணலிங்கேஸ்வரா் கோயிலில் தரிசனம் செய்யவும், மருத்துவ குணமுள்ள பஞ்சலிங்கம் அருவியில் குளிக்கவும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் அன்றாடம் வந்து செல்கின்றனா்.

இந்த நிலையில் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அருவியில் குளிக்க கோயில் நிா்வாகம் தடை விதித்தது. இதனால் சனிக்கிழமை இங்கு வந்த சுற்றுலாப் பயணிகள், ஐயப்ப பக்தா்கள் ஏமாற்றமடைந்தனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT