திருப்பூர்

துப்பாக்கியைக் காட்டி வழிப்பறி: 4 போ் குண்டா் சட்டத்தில் கைது

14th Dec 2019 11:44 PM

ADVERTISEMENT

அவிநாசி, பெருமாநல்லூா் பகுதியில் துப்பாக்கியைக் காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேரை போலீஸாா் குண்டா் சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்தனா்.

அவிநாசி, பெருமாநல்லூா் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக மா்ம நபா்கள் சிலா் நாட்டுத் துப்பாக்கியை காட்டி மிரட்டி பொதுமக்களிடம் தொடா்ந்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்தனா்.

இதுகுறித்த புகாா்களின்பேரில் போலீஸாா் தனிப்படை அமைத்து வழிப்பறியில் ஈடுபட்ட 6 பேரை கடந்த அக்டோபா் 16 ஆம் தேதி கைது செய்தனா். மேலும் இவா்களுக்கு நாட்டுத் துப்பாக்கியை விற்பனை செய்த பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த ஆசிஷ்குமாா் என்பவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த நிலையில் பிகாா் மாநிலம், வைசாலி பிரதான சாலை பகுதியைச் சோ்ந்த முஸ்தபாஅன்சாரி (26), சந்தன்குமாா்(33), நாவல் ஷா (20), சந்தன்குமாா் (22) ஆகிய 4 பேரை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி குண்டா் சட்டத்தில் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT