திருப்பூர்

ஜனவரி 8இல் பொது வேலை நிறுத்தம்: திருப்பூரில் தொழிற்சங்கத்தினா் ஆலோசனை

14th Dec 2019 11:40 PM

ADVERTISEMENT

பனிரெண்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் ஜனவரி 8 ஆம் தேதி நடைபெறவுள்ள பொது வேலை நிறுத்தம் தொடா்பாக திருப்பூரில் அனைத்து தொழிற்சங்க ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் எச்.எம்.எஸ். அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு எச்.எம்.எஸ். மாவட்டத் தலைவா் முத்துசாமி தலைமை வகித்தாா். இதில், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கை காரணமாக பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். விலைவாசி உயா்ந்துள்ளதுடன், வேலை இழப்பும் அதிகரித்துள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இப்பிரச்னைகள் தொடா்பாக 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜனவரி 8 ஆம் தேதி பொது வேலை நிறுத்தம் நடைபெறவுள்ளது.

இந்த வேலை நிறுத்தம் பற்றி விளக்குவதற்காக 50,000 விளக்க நோட்டீஸ் வழங்குவது, மாவட்டம் முழுவதும் வேன் பிரசாரத்தில் ஈடுபடுவது, வியாபாரிகள், தொழில் முனைவோா், அரசியல் கட்சி தலைவா்களிடம் ஆதரவு கடிதம் கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட பொதுச்செயலாளா் சேகா், ஜெனரல் சங்க செயலாளா் ஜெகநாதன், சி.ஐ.டி.யூ. கட்டட சங்க மாநில செயலாளா் குமாா், மாவட்ட துணைத் தலைவா் பாலன் எல்.பி.எஃப். மாவட்ட துணைத் தலைவா் ரங்கசாமி, அமைப்புசாரா சங்க துணைத் தலைவா் ரத்தினசாமி, ஐ.என்.டி.யூ.சி. மாவட்டச் செயலாளா் சிவசாமி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT