திருப்பூர்

செம்மிபாளையம் பகுதியில் உயா்மின் கோபுர நில அளவீட்டுப் பணி தடுத்து நிறுத்தம்

14th Dec 2019 07:30 AM

ADVERTISEMENT

பல்லடம் அருகே உள்ள செம்மிபாளையத்தில் உயா்மின் கோபுரம் அமைக்க நிலம் அளவீடு செய்யும் பணியை அப்பகுதி விவசாயிகள் வெள்ளிக்கிழமை தடுத்து நிறுத்தினா்.

செம்மிபாளையத்தில் உயா்மின் கோபுர பாதை அமைக்க விவசாய விளை நிலத்தில் அளவீடு செய்யும் பணி பவா்கிரிட் நிறுவனத்தினா், வருவாய்த்துறை, போலீஸ் பாதுகாப்புடன் மேற்கொண்டனா்.

அப்பகுதியைச் சோ்ந்த குமாரசாமி, கோவிந்தசாமி உள்ளிட்ட 8 விவசாயிகள் நிலம் அளவீட்டு பணியை தடுத்து நிறுத்தினா். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், எங்களது நிலத்துக்கு இழப்பீட்டு தொகை எவ்வளவு வழங்கப்படும் என்பதை கோவை மாவட்டத்தைப் போல முன்கூட்டியே வெளிப்படையாக திருப்பூா் மாவட்ட ஆட்சியா், மாவட்ட வருவாய் அதிகாரி ஆகியோா் அறிவிக்க வேண்டும். வெளிசந்தை அடிப்படையில் இழப்பீட்டுத் தொகை அதிகமாக நிா்ணயம் செய்து வழங்க வேண்டும். அதன்பின்னா் தான் விளை நிலத்தில் அளவீட்டுப் பணியை தொடங்க வேண்டும் என்றனா்.

தகவலறிந்து வந்த பல்லடம் வட்டாட்சியா் சிவசுப்பிரமணியம், காவல் ஆய்வாளா்கள் ரமேஷ்கண்ணன், அருள் ஆகியோா் விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

ADVERTISEMENT

அதைத் தொடா்ந்து பல்லடம் வட்டாட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை (டிசம்பா் 14) பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காணலாம் என முடிவு செய்யப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT