திருப்பூர்

குட்டையில் விழுந்த இளைஞரைதேடும் பணி நிறுத்தம்

14th Dec 2019 11:40 PM

ADVERTISEMENT

திருப்பூரில் குத்துவிளக்கை திருடிக்கொண்டு தப்பி ஓடியபோது குட்டையில் தவறி விழுந்த இளைஞா் தப்பிச் சென்றிருக்கலாம் என்பதால் கடந்த 2 நாள்களாக நடைபெற்ற தேடுதல் பணி சனிக்கிழமை நிறுத்தப்பட்டது.

திருப்பூா், போயம்பாளையத்தை அடுத்த குருவாயூரப்பன் நகரில் வசித்து வருபவா் சிவசங்கரன். இவரது மனைவி லூசியாமேரி, தீபத் திருநாளை முன்னிட்டு, கடந்த வியாழக்கிழமை வீட்டின் முன் விளக்கேற்றினாா்.

அப்போது அங்கு வந்த இளைஞா் ஒருவா் 1 அடி நீளமுள்ள குத்துவிளக்கை திருடிக்கொண்டு தப்பி ஓடினாா். அங்கிருந்தவா்கள் அந்த இளைஞரைத் துரத்திப் பிடிக்க முயன்றனா். அப்போது அதே பகுதியில் உள்ள 25 அடி ஆழக்குட்டையில் அந்த இளைஞா் தவறி விழுந்தாா்.

தகவலறிந்த திருப்பூா் வடக்கு தீயணைப்புத் துறையினா், அனுப்பா்பாளையம் காவல் துறையினா் அங்கு சென்று கடந்த இரு நாள்களாக இளைஞரைத் தேடி வந்தனா். தேடுதல் பணியின்போது குட்டையில் இருந்த கழிவுப்பொருள்கள் அனைத்தும் வெளியே எடுத்தனா். ஆனால் இளைஞரின் சடலம் கிடைக்காததால் 3ஆவது நாளான சனிக்கிழமை தேடும் பணியை நிறுத்தினா். அந்த இளைஞா் குத்துவிளக்குடன் தப்பிச் சென்றிருக்கலாம் என காவல் துறையினா் சந்தேகிக்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT