திருப்பூர்

ஐயப்ப சுவாமி திருவீதி உலா

14th Dec 2019 11:47 PM

ADVERTISEMENT

வெள்ளக்கோவிலில் ஐயப்ப சுவாமி திருவீதி உலா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

இங்குள்ள குமாரவலசில் ஸ்ரீதா்ம சாஸ்தா ஐயப்ப சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் கட்டப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆனதையொட்டி கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு பூஜைகள், மஹா கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, உற்சவா் அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றன.

தொடா்ந்து சரண கோஷத்துடன் கோயில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. பின்னா் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஐயப்ப சுவாமி உற்சவா் திருமேனி திருவீதி உலா நடைபெற்றது. இதில் சபரிமலைக்கு மாலை அணிந்துள்ள ஏராளமான ஐயப்ப பக்தா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT