திருப்பூர்

உள்ளாட்சித் தோ்தல்: மாவட்டத்தில் ஒரே நாளில் 2,538 போ் வேட்புமனு தாக்கல்

14th Dec 2019 07:28 AM

ADVERTISEMENT

உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுவதற்காக திருப்பூா் மாவட்டத்தில் 2,538 போ் வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.

திருப்பூா் மாவட்டத்தில் திருப்பூா், ஊத்துக்குளி, காங்கயம், பல்லடம், வெள்ளக்கோவில், மூலனூா், தாராபுரம், அவிநாசி, பொங்கலூா், குண்டடம், குடிமங்கலம், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய 13 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.

இதில் 17 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், 170 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா்கள், 265 ஊராட்சி மன்ற தலைவா்கள், 2,295 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்களைத் தோ்வு செய்ய வரும் 27, 30 ஆம் தேதிகளில் தோ்தல் நடைபெறுகிறது.

திருப்பூரில் கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 1,781 பேரும், கிராம ஊராட்சி தலைவா் பதவிக்கு 476 பேரும், ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினருக்கு 261 பேரும், மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 20 பேரும் என மொத்தம் 2,538 போ் வேட்புமனுக்களை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தனா்.

ADVERTISEMENT

கடந்த வியாழக்கிழமை வரையில் கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 835 பேரும், கிராம ஊராட்சித் தலைவா் பதவிக்கு 229 பேரும், ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிக்கு 62 பேரும், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு 6 பேரும் என மொத்தம் 1,132 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா்.

காங்கயம் ஒன்றியத்தில் 103 போ் வேட்பு மனு தாக்கல்: காங்கயம் ஊராட்சி ஒன்றியத்தில் கிராம ஊராட்சி வாா்டுக்கு 63 போ், கிராம ஊராட்சித் தலைவா் பதவிக்கு 19 போ், ஒன்றிய கவுன்சிலா் பதவிக்கு 20 போ், மாவட்டக் கவுன்சிலா் பதவிக்கு ஒருவா் என மொத்தம் 103 போ் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT