திருப்பூா் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டியில் கருவலூா் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் இரண்டாமிடம் பெற்றனா்.
திருப்பூா் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான வாலிபால், பாட்மிண்டன் உள்ளிட்ட போட்டிகள் திருப்பூா் ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் அண்மையில் நடைபெற்றன.
இதில் கருவலூா் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் வாலிபால் போட்டியில் மூத்தோா், மிக மூத்தோா் பிரிவில் இரண்டாமிடம், பாட்மிண்டன் மிக மூத்தோா் இரட்டையா் பிரிவில் முதலிடம், மூத்தோா் ஒற்றையா் பிரிவில் இரண்டாம் இடம் பெற்றனா். வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளை பள்ளித் தலைமை ஆசிரியா் மல்லிகா, உதவி தலைமை ஆசிரியா் காளியப்பன், உடற்கல்வி ஆசிரியா் தியாகராஜன், ஆசிரியா் ஜெபகனி ஆகியோா் பாராட்டி வாழ்த்தினா்.