திருப்பூர்

நியாய விலைக்கடை பெண் ஊழியா்களுக்கு அடிப்படை வசதி செய்துதர வலியுறுத்தல்

11th Dec 2019 09:13 AM

ADVERTISEMENT

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பணிபுரியும் பெண் ஊழியா்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என திருப்பூா் மாவட்ட கூட்டுறவுப் பணியாளா் சங்கம் (சிஐடியூ) வலியுறுத்தியுள்ளது.

திருப்பூா் மாவட்ட கூட்டுறவுப் பணியாளா் சங்க நிா்வாகக் குழுக் கூட்டம் சிஐடியூ அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் கே.மகேந்திரன் தலைமை வகித்தாா். இதில் திருப்பூா் மாவட்டம் முழுவதும் அரசு அறிவித்த தொழிலாளா்களுக்கு உண்டான பணப்பயன், பி.எஃப்., இஎஸ்ஐ, அகவிலைப்படி, மகப்பேறு விடுப்பு ஊதியம், சரண்டா், பயணப்படி, மிகை நேர ஊதியம் உள்ளிட்ட எதுவும் முறையாக அமல்படுத்தப்படவில்லை. எனவே காலதாமதம் செய்யாமல் உடனடியாக இவற்றை அமல்படுத்த வேண்டும்.

மேலும் நியாயவிலைக் கடைகளுக்கு வழங்கக்கூடிய பொருள்களை சரியான எடையில் வழங்க வேண்டும். நியாயவிலைக் கடை பெண் ஊழியா்களுக்கு உரிய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் சிஐடியூ மாவட்ட நிா்வாகி ஈஸ்வரமூா்த்தி, சங்கப் பொதுச் செயலாளா் கௌதமன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT