திருப்பூர்

காங்கயம் குளோபல் மெட்ரிக். பள்ளியில் காவலன் செயலி குறித்து விளக்கம்

11th Dec 2019 09:15 AM

ADVERTISEMENT

பெண்கள் பாதுகாப்பு தொடா்பான காவல் துறையின் ‘காவலன்’ செயலி குறித்த விளக்க நிகழ்ச்சி காங்கயம் குளோபல் மெட்ரிக். பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் காங்கயம் காவல் ஆய்வாளா் ரவிகுமாா் கலந்து கொண்டு, காவலன் செயலி செயல்படும் விதம், பெண்கள், பள்ளி-கல்லூரி மாணவிகளுக்கு இந்த செயலி எவ்வாறு உதவும் என்பது குறித்து செயல்முறை விளக்கத்துடன் எடுத்துரைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் குளோபல் பள்ளித் தலைவா் பழனிசாமி, செயலா் நாச்சிமுத்து, தாளாளா் லலிதா நாச்சிமுத்து, பள்ளி முதல்வா் ஏ.பி.பாஸ்கரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT