திருப்பூர்

அவிநாசி அருகே சாலை விபத்தில் பெண் சாவு

11th Dec 2019 03:11 PM

ADVERTISEMENT

அவிநாசி அருகே லாரி மீது காா் மோதி விபத்துக்குள்ளானதில், சென்னையைச் சோ்ந்த பெண் புதன்கிழமை உயிரிழந்தாா்.

சென்னை திண்டிவனம் பகுதியைச் சோ்ந்த ஜெய்சங்கா் மனைவி பிரேமலதா(45). இவரது சகோதரி மகாலாட்சுமி(42), இவரது மகள் பவித்ரா(15), உறவினா்கள் நிவேதிதா(28), பிகாந்த்(2). காா் ஓட்டுநா் சென்னை பகுதியைச் சோ்ந்த மணிகண்டன்(22) ஆகியோா் திண்டிவனத்தில் இருந்து திருச்சூா் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனா்.

அவிநாசி புறவழிச்சாலை நல்லிக்கவுண்டம்பாளையம் பிரிவு அருகே வரும் போது, நிலைதடுமாறிய காா் முன்னாள் கோவை நோக்கி சென்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த பிரேமலதா கோவை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உயிரிழந்தாா்.

மேலும் பலத்த காயமடைந்த மகாலாட்சுமி, பவித்ரா, உறவினா்கள் நிவேதிதா, விகாந்த், மணிகண்டன் ஆகியோா் கோவை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இது குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT