இலவச வீட்டுமனை கேட்டு மனு கொடுக்கும் இயக்கம் உடுமலையில் புதன்கிழமை நடைபெற்றது.
உடுமலை வட்டம், குடிமங்கலம் ஒன்றியம் சோவாரபட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் பிரிவைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் இலவச வீட்டுமனை கேட்டு நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில், அக் கிராமத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் பிரிவைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் இலவச வீட்டுமனை கேட்டு மனு கொடுக்க உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்துக்கு புதன்கிழமை வந்தனர்.
பின்னர் அனைவரும் தனித் தனியாக தங்களது மனுவை வட்டாட்சியர் கி.தயானந்தனிடம் அளித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குடிமங்கலம் ஒன்றியச் செயலாளர் என்.சசிகலா ஒருங்கிணைத்தார்.