திருப்பூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 29) நடைபெறுகிறது.
இதுகுறித்து திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சு.செண்பகவல்லி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூர் கோட்டத்துக்கு உள்பட்ட திருப்பூர் வடக்கு, தெற்கு, பல்லடம், ஊத்துக்குளி மற்றும் அவிநாசி வட்டங்களில் விவசாயிகள் தொடர்பான பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு குறைதீர் முகாம் நடைபெறுகிறது.
எனவே, திருப்பூர் கோட்டத்தில் உள்ள விவசாயிகள் இந்தக் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்று விவசாயம் சார்ந்த பிரச்னைகளுக்கு மனு அளித்து தீர்வு காணலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.