திருப்பூர்

முத்தூர் விற்பனைக் கூடத்தில் 15 டன் தேங்காய், கொப்பரை விற்பனை

18th Aug 2019 09:33 AM

ADVERTISEMENT

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமை 15 டன் தேங்காய், கொப்பரை விற்பனை நடைபெற்றது.
 இந்த வாரம் 28,590 தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. எடை 11,023 கிலோ. இவற்றை வாங்குவதற்காக 112 விவசாயிகளும், 10 வியாபாரிகளும் வந்திருந்தனர். கிலோ ரூ.23.10 முதல் ரூ.28.50 வரை விற்கப்பட்டது. சராசரி விலை கிலோ ரூ.26.50. இதன் மதிப்பு ரூ. 2 லட்சத்து 92 ஆயிரத்து 924.
 4,355 கிலோ கொப்பரை வரத்து இருந்தது. 101 விவசாயிகள், 9 வியாபாரிகள் பங்கேற்றனர். கிலோ ரூ.61.25 முதல் ரூ.100.10 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ.96.60. இதன் விற்பனைத் தொகை ரூ. 3 லட்சத்து 78 ஆயிரத்து 452.
 விற்பனைக் கூட மேற்பார்வையாளர் ஸ்ரீ ரங்கன் முன்னிலையில் ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 6 லட்சத்து 71 ஆயிரத்து 376 அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது. மொத்தம் 15.37 டன் தேங்காய், கொப்பரை விற்பனை நடைபெற்றது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT