திருப்பூர்

குடியிருப்புப் பகுதியில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிர்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

18th Aug 2019 09:29 AM

ADVERTISEMENT

திருப்பூர், எம்.எஸ். நகர் குடியிருப்புப் பகுதியில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
 திருப்பூர், கொங்கு பிரதான சாலை, எம்.எஸ். நகர்ப் பகுதியில் உள்ள வி.ஆர்.பி. நகர் குடியிருப்புப் பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அப்பகுதியில் உள்ள சிதிலமடைந்த அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மேல் பகுதியில் செல்லிடப்பேசி கோபுரம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
 இதனை அறிந்த பொதுமக்கள் செல்லிடப்பேசி கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதே பகுதியில் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். இருப்பினும் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது.
 இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் இணைந்து, திருப்பூர் வடக்கு காவல் நிலையத்திலும், மாநகராட்சி ஆணையரிடமும் புகார் அளித்தனர்.
 இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், சிதிலமடைந்த கட்டடத்தில் செல்லிடப்பேசி கோபுரம் அமைத்தால் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும். மேலும் அருகில் உள்ள வீடுகளுக்கும் கதிர்வீச்சு தாக்குதல் ஏற்படும் நிலை உள்ளது. எனவே இப்பகுதியில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க தடைவிதிக்க வேண்டும் என்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT