உடுமலையில் அரிய வகை கொம்பேரி மூக்கன் பாம்பை வனத் துறையினர் சனிக்கிழமை பிடித்து வனத்தில் விடுவித்தனர்.
உடுமலை நகரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த வஉசி வீதியில் பாம்பு சுற்றித் திரிவதாக வனத் துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு சென்ற வனத் துறையினர் சுமார் 1 மணி நேரம் போராடி கொம்பேரி மூக்கன் வகை பாம்பை பிடித்தனர்.
பிடிபட்ட பாம்புக்கு சுமார் 2 வயது இருக்கும் எனவும், 3 அடி நீளமுள்ள அந்த பாம்பை உடுமலை வனப் பகுதியில் விடுவித்ததாகவும் வனத் துறையினர் தெரிவித்தனர்.