திருப்பூர்

ஹாக்கிப் போட்டி: பெதப்பம்பட்டி அரசுப் பள்ளி சாம்பியன்

16th Aug 2019 06:57 AM

ADVERTISEMENT

குறுமைய அளவிலான விளையாட்டுப் போட்டியில் உடுமலையை அடுத்துள்ள பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஹாக்கிப் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றது.
உடுமலை மற்றும் மடத்துக்குளம் வட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக். பள்ளிகள் பங்கேற்கும் குறுமைய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் கால்பந்து, ஹாக்கி, கபாடி, கையுந்து பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட குழு போட்டிகள், ஓட்டப்பந்தயம் மற்றும் தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 
இளையோர், மூத்தோர், மிக மூத்தோர் என மூன்று பிரிவுகளாக நடத்தப்படும் இந்தப் போட்டிகளில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்நிலையில் மாணவர்களுக்கான ஹாக்கிப் போட்டிகள் உடுமலை நேதாஜி  விளையாட்டு மைதானத்தில்  செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  
இதில், மூன்று பிரிவுகளிலும் சேர்த்து மொத்தம் 13 அணிகள் பங்கேற்றன. இதில் 14 வயதுக்கு உள்பட்ட இளையோர் பிரிவு, 17 வயதுக்கு உட்பட்ட மூத்தோர் பிரிவு மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட மிக மூத்தோர் பிரிவு என மூன்று பிரிவுகளிலும் உடுமலையை அடுத்துள்ள பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி வென்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.  பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் அப்துல் காதர், உதவி தலைமை ஆசிரியர் கீதா, உடற்கல்வி ஆசிரியர் ஞா.செந்தில்குமாரவேல் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் கழகத்தினர் ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்ற மாணவர்களை புதன்கிழமை பாராட்டினர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT