திருப்பூர்

நகராட்சிக் கடைகள் ஏலம் ஒத்திவைப்பு

16th Aug 2019 06:55 AM

ADVERTISEMENT

வெள்ளக்கோவில் நகராட்சி கடைகளுக்கான ஏலம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 நகராட்சிக்குச் சொந்தமான காலியாக இருக்கும் கடைகள் மற்றும் பிற இனங்களுக்கு வருடாந்திர ஏலம் கடந்த புதன்கிழமை (ஆகஸ்ட் 14) நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 
தீத்தாம்பாளையம் வணிக வளாகக் கடை எண் 1, முத்தூர் சாலை புதிய பேருந்து நிலைய கடை எண் 3, 4, 8, வாரச்சந்தை முன்புறமுள்ள கடை எண் 4, இந்திரா நகர் கட்டணக் கழிப்பிடம், புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நுழைவுக் கட்டணம் வசூல் செய்யும் உரிமம் ஆகியவற்றுக்கான ஏலத்தில் யாரும் பங்கேற்கவில்லை.
 இதனால் ஆகஸ்ட் 29 ஆம் தேதி காலை 11 மணிக்கு நகராட்சி அலுவலகத்தில் மீண்டும் ஏலம் நடத்தப்படும் என நகராட்சி ஆணையர் அ.சங்கர் தெரிவித்துள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT