திருப்பூர்

திருப்பூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: இன்று நடைபெறுகிறது

16th Aug 2019 06:56 AM

ADVERTISEMENT

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16)  நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி அளவில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில், தனியார் துறையில் வேலையளிப்பவர்கள் கலந்துகொண்டு பயனாளிகளைத் தேர்வு செய்யவுள்ளனர். 
இதனால் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் முதல் முதுநிலை பட்டதாரிகள், ஐடிஐ, டிப்ளமோ படித்தவர்கள், டிரைவர்கள் மற்றும் தையல் பயிற்சி பெற்றவர்கள் இந்த முகாமில் பங்கேற்றுப் பயனடையலாம். 
வேலைவாய்ப்பு முகாமுக்கு வரும்போது தங்களது பதிவில் குறைகள் கண்டறியப்பட்டால் அதனை சரிசெய்து கொள்ளலாம் என்றும், கூடுதல் கல்வி பதிவு செய்தல், வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை விண்ணப்பம் பெறுதல் மற்றும் புதுப்பித்தல் செய்தல் ஆகியவற்றையும் அன்றைய தினத்தில் செய்துகொள்ளலாம்.
தனியார் துறைகளில் வேலையில் சேருவதால் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்களின் பதிவு எண் ரத்து செய்யப்பட்டமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT