திருப்பூர்

பஞ்சலிங்கம் அருவியில் தடை நீட்டிப்பு

11th Aug 2019 08:59 AM

ADVERTISEMENT

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கன மழையின் காரணமாக உடுமலை அருகே உள்ள பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. உடுமலை அருகே உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலம் திருமூர்த்திமலை. இங்கு பிரசித்தி பெற்ற அமணலிங்கேஸ்வரரை தரிசிக்கவும், மருத்துவ குணமுள்ள பஞ்சலிங்க அருவியில் குளிக்கவும் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும் இங்குள்ள படகு சவாரி, வண்ண மீன் பூங்கா, நீச்சல் குளம், திருமூர்த்தி அணை இவற்றை பார்த்து ரசிக்க ஏராளமானோர் வருகின்றனர்.
 இந்நிலையில் கடந்த 2 நாள்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கன மழை பெய்து வருகிறது. இதனால் அமணலிங்கேஸ்வரர் கோயிலை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கோயிலில் பூஜைகள் ரத்து செய்யப்பட்டன. இங்குள்ள பஞ்சலிங்க அருவியிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வியாழக்கிழமை கோயில் நிர்வாகம் தடை விதித்தது. இந்த தடை இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT