திருப்பூர்

திருப்பூரில் அரசு மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும்: ஓய்வூதியர் சங்க மாநாட்டில் தீர்மானம்

11th Aug 2019 08:55 AM

ADVERTISEMENT

திருப்பூரில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க 3ஆவது மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 திருப்பூரில் சனிக்கிழமை தொடங்கிய இம்மாநாட்டுக்கு மாவட்டத் தலைவர் க.சண்முகம் தலைமை வகித்தார்.
 இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:
 திருப்பூர் மாநகரில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும். தாராபுரத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரி தொடங்க வேண்டும். மத்திய அரசு வெளியிட்டுள்ள வரைவு புதிய கல்விக் கொள்கையை திரும்பப்பெற வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் பணமில்லாத சிகிச்சை வசதி செய்துதர வேண்டும்.
 ஓய்வூதியர்களுக்கான மருத்துவப்படியை ரூ.1,000ஆக உயர்த்துவதுடன், காப்பீட்டு தொகையை ரூ.150ஆக குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டத் துணைத் தலைவர் பி. மணிவேலு, செயற்குழு உறுப்பினர் வி.பி.பாலகிருஷ்ணன், மாநிலத் துணைத் தலைவர் எஸ்.சந்திரன், செயலாளர் மு.பாலச்சந்திரமூர்த்தி, பொருளாளர் கி.மேகவர்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT