திருப்பூர்

சத்யம் பள்ளியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு

11th Aug 2019 08:55 AM

ADVERTISEMENT

வெள்ளக்கோவில் சத்யம் மாண்டிசோரி பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு மழைநீர் சேகரிப்புக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
 இதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தைகள் தொப்பி அணிந்து, நீலநிற பலூன்களை வைத்துக்கொண்டு தண்ணீரின் அவசியம் குறித்து வலியுறுத்தினர். இது குறித்து தங்களுடைய பெற்றோர், அக்கம்பக்கத்தினரிடம் எடுத்துக் கூறுவோம் என உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். மழைநீர் உயிர்நீர், ஆறுகளைக் காப்போம், பசுமையை வளர்த்தால் தூய்மையான நீர், தண்ணீரைச் சேகரிப்போம் என்பன போன்ற பதாகைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
 இதற்கு பள்ளியின் தலைவர் ராசி கே.ஆர்.சின்னச்சாமி தலைமை வகித்தார். பள்ளித் தாளாளர் சி.ஏ.எஸ்.ரகுநாதன், பொருளாளர் எஸ்.பி.சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் சி.பரமேஸ்வரி, ஆசிரிய, ஆசிரியைகள் செய்திருந்தனர். பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT