திருப்பூர்

அமராவதி அணையின் நீர்மட்டம் 75 அடியாக உயர்வு

11th Aug 2019 08:56 AM

ADVERTISEMENT

திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை மாலை நிலவரப்படி 75 அடியாக உயர்ந்துள்ளது.
 உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணை மூலம் திருப்பூர், கரூர் ஆகிய இரு மாவட்டங்களிலும் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் பழைய, புதிய ஆயக்கட்டு பாசன நிலங்கள் பயன்பெறுகின்றன. மேலும் நூற்றுக்கணக்கான கரையோர கிராமங்களுக்கு இந்த அணை குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது.
 இந்நிலையில், அணையின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளான கேரள மாநிலம் மூணாறு, மறையூர், காந்தலூர், கோவில்கடவு பகுதிகளில் பலத்த மழை பெய்வதால் பாம்பாறு, சின்னாறு, தேனாறு ஆகிய ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 70 அடியாகவும், மாலை 5 மணி நிலவரப்படி 75 அடியாகவும் அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. அணைக்கு 5,099 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. அணைப் பகுதியில் மழை அளவு 12 மில்லி மீட்டராக இருந்தது.
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT