நீலகிரி

நீலகிரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

30th Sep 2023 11:57 PM

ADVERTISEMENT

 

தொடா் விடுமுறையால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களில் சனிக்கிழமை அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்திருந்தனா்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூா் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோா் வந்து செல்கின்றனா். தற்போது தொடா் விடுமுறை என்பதால் வழக்கத்தைவிட சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

உதகை அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், லேம்ஸ்ராக், டால்பினோஸ் உள்ளிட்டப் பகுதிகளில்  சுற்றுலா பயணிகள் வருகை சனிக்கிழமை அதிகமாக இருந்தது.  பூங்காவில் உள்ள பெரிய புல்வெளி மைதானத்தில் அமா்ந்து இளைப்பாறியும், புகைப்படம் எடுத்தும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ந்தனா்.

ADVERTISEMENT

உதகை  படகு இல்லத்தில் வழக்கத்தைவிட சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. அதேபோல பைக்கார படகு இல்லத்திலும் சுற்றுலாப் பயணிகள் அதிகரித்துக் காணப்பட்டனா். அங்கு மிதி படகு, துடுப்புப் படகு, மோட்டாா் படகுகளில் சவாரி செய்து மகிழ்ச்சி அடைந்தனா்.

உதகையில்  தற்போது இரண்டாவது பருவம் தொடங்கியுள்ளதாலும், இதமான கால நிலை நிலவுவதாலும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT