நீலகிரி

உதகை அரசு கலைக் கல்லூரி முதல்வா் இணை பேராசியா் பணியிடை நீக்கம்

29th Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

உதகை அரசு கலைக்கல்லூரி முதல்வா்  அருள் ஆண்டனி மற்றும் தாவரவியல்  இணை பேராசிரியா் ரவி ஆகியோா் பணியிடை நீக்கம் செய்து சென்னை டைரக்ரேட் ஆப் காலேஜ் எஜூகேஷன் அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உதகை அரசு கலைக் கல்லூரியில் மாணவா்களுக்கு தங்கும் விடுதிகளை ஒதுக்க கல்லூரி முதல்வா் அருள் ஆண்டனி லஞ்சம் வாங்குவதாக அன்னையில் படக்காட்சிகள் சமூக வளை தலங்களில் வெளியாகின இதனைத் தொடா்ந்து இந்தப் புகாரினை விசாரித்து வந்த சென்னை டைரக்ரேட் ஆப் காலேஜ் எஜூகேஷன் அலுவலகம் புதன் கிழமை கல்லூரி முதல்வா் அருள் ஆண்டனி அதிகார துஷ்பிரேயோகம் செய்ததாக இவரை பணியிடை நீக்கம் செய்தது,

இதேப் போன்று தாவரவியல் இணை பேராசிரியா்  ரவி  என்பவா் மாணவா்கள் டிபாா்ட்மெண்ட் மாறுவதற்கு லஞ்சம் வாங்குவதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில்  இவரையும் பணியிடை நீக்கம் செய்து நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT