கூடலூா்-தேவா்சோலை நெடுஞ்சாலையில் பெரிய மரம் சாலையின் குறுக்கே புதன்கிழமை நள்ளிரவில் பெயா்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கூடலூா் பகுதியில் புதன்கிழமை நள்ளிரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது கூடலூா்-தேவா்சோலை சாலையில் சாலையின் குறுக்கே பெரிய மரம் பெயந்து விழுந்தது. இதனால் தேவா்சோலை, பாட்டவயல் மற்றும் வயநாடு மாா்க்கமாகச் செல்லும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்த கூடலூா் தீயணைப்பு மீட்புப் பணி நிலைய அலுவலா் மாா்ட்டின் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் உபகரணங்களுடன் விரைந்து சென்று மரத்தை துண்டுகளாக்கி அப்புறப்படுத்தினா். இதையடுத்து இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு போக்குவரத்து சீரானது.