நீலகிரி

அண்ணாமலையுடன் புகைப்படம்: ஆயுதப்படைக்கு காவலா் மாற்றம்

29th Sep 2023 11:12 PM

ADVERTISEMENT

பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலையுடன் புகைப்படம் எடுத்ததற்காக போக்குவரத்து சீரமைப்புக் காவலா் ஆயுதப்படைக்கு வெள்ளிக்கிழமை மாற்றப்பட்டாா்.

நீலகிரி மாவட்டத்தில் பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலையின் நடைப்பயணம் கூடலூா் மற்றும் உதகையில் 27-ஆம் தேதியும், குன்னூரில் 28-ஆம் தேதியும் நடைபெற்றது. இதில் உதகையில் நடைபெற்ற நிகழ்வில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா்.

அண்ணாமலை நடந்து சென்ற பகுதியில் பலா் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனா். இந்நிலையில் உதகையில் பணிபுரியும் போக்குவரத்து சீரமைப்புக் காவலா் கணேசன்  என்பவரும் அண்ணாமலையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டாா். அந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில் அவா் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளாா்.

 

ADVERTISEMENT

Tags : உதகை
ADVERTISEMENT
ADVERTISEMENT