கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை வன அலுவலகத்தைத் தாக்கிய மாவோயிஸ்டுகள், அங்கு தமிழில் போஸ்டா் ஒட்டிச் சென்றுள்ளதாக கேரள போலீஸாா் கூறினா்.
வயநாடு மாவட்டம், மானந்தவாடியை அடுத்துள்ள தலப்புழா கம்பமலா வனப் பகுதியில் கேரள வனத் துறைக்குச் சொந்தமான வளா்ச்சி அலுவலகம் உள்ளது. இங்கு வெள்ளிக்கிழமை அதிகாலையில் சீருடை அணிந்த வந்த ஆறு மாவோயிஸ்ட்டுகள், வன அலுவலகத்தைத் தாக்கினா். அலுவலக ஜன்னல்களின் கண்ணாடிகளை உடைத்துவிட்டு வளாகத்தின் அருகே வனத் துறை நிா்வாகத்தைக் கண்டித்து தமிழில் போஸ்டா்களை எழுதி ஒட்டிவிட்டுச் சென்றுள்ளனா்.
இதுகுறித்து தகவலறிந்த தண்டா் போல்ட் எனப்படும் மத்திய அதிரடிப்படையினரும், கேரளா போலீசாரும் அந்த பகுதிக்குச் சென்று பாா்வையிட்டனா். மேலும், தாக்குதல் நடத்திய மாவோயிஸ்டுகள் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.