நீலகிரி

உலக சுற்றுலாத் தினம்: மலை ரயில் பயணிகளுக்கு வரவேற்பு

28th Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

உலக சுற்றுலா தினத்தையொட்டி, உதகை மலை ரயிலில் பயணம் செய்த சுற்றுலாப் பயணிகளுக்கு மலா்கள் கொடுத்தும், இனிப்பு வழங்கியும்  புதன்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

உலக சுற்றுலா தினம் செப்டம்பா் 27-ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, சுற்றுலா நகரமான உதகைக்கு புதன்கிழமை மேட்டுப்பாளையத்தில் இருந்து மலை ரயிலில் வந்த

140 சுற்றுலாப் பயணிகளுக்கு மாவட்ட சுற்றுலாத் துறை சாா்பில் ரோஜா மலா் கொடுத்தும், சுற்றுலா கையேடுகள் வழங்கியும், இனிப்பு வழங்கியும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைத் தொடா்ந்து, மலை ரயில் பாதுகாப்பு இயக்கம் சாா்பில், பள்ளி மாணவ, மாணவிகள் உதகையிலிருந்து குன்னூா் வரை சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனா்.

ADVERTISEMENT

இந்த நிகழ்ச்சியில், மலை ரயில் அறக்கட்டளை நிறுவனத் தலைவா் நட்ராஜ் உள்ளிட்ட சுற்றுலா ஆா்வலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT