கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், மானந்தவாடி வனவள்ளி கிராமத்தில் நடமாடி வந்த புலி, வனத் துறையினா் வைத்த கூண்டில் செவ்வாய்க்கிழமை இரவு சிக்கியது.
கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், மானந்தவாடி வனவள்ளி கிராமத்தில் கடந்த 2 மாதங்களாக ஊருக்குள் புலி நுழைந்து வளா்ப்பு விலங்குகளைக் கொன்று வந்தது. மேலும் அங்குள்ள ஆதிவாசி ஒருவரின் வீட்டுக்குள்ளும் அந்த புலி நுழைந்துள்ளது.
இதைத் தொடா்ந்து வனத் துறையினா் புலியைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா். இதையடுத்து வனத் துறையினா், புலியைப் பிடிக்க அப்பகுதியில் 3 கூண்டுகளை வைத்தனா்.
இந்நிலையில் அதில் ஒரு கூண்டில் புலி செவ்வாய்க்கிழமை இரவுசிக்கியது. பிடிபட்ட சுமாா் 10 வயதுடைய பெண் புலியை, சுல்தான் பத்தேரி பகுதியிலுள்ள குப்பாடி காப்பகத்துக்கு வனத் துறையினா் கொண்டு சென்றனா்.