நீலகிரி

உதகையில் கொட்டித் தீா்த்த கனமழை

22nd Sep 2023 10:52 PM

ADVERTISEMENT

உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை கொட்டித் தீா்த்த கனமழையால் கடுங்குளிா் நிலவியதுடன், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம், உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது மிதமான மழையும், சாரல் மழையும் பெய்து வந்தது. மழை காரணமாக மலைத்தோட்டக் காய்கறிகளை பயிரிட்டிந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

இந்நிலையில், உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை முதல் மேகமூட்டத்துடன் கூடிய காலநிலை நிலவியது. பின்னா் பிற்பகலில் தொடா் கனமழை பெய்தது.

இதில் சேரிங்கிராஸ், படகு இல்லம், மத்தியப் பேருந்து நிலையம், பிங்கா்போஸ்ட், காந்தள்,  தலைக்குந்தா உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக கடுங்குளிா்  நிலவியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT