பத்திரப் பதிவுகளில் பழைய முறையையே பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேவா்சோலை பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் வியாழக்கிழமை வலியுறுத்தப்பட்டது.
தேவா்சோலை பேரூராட்சி மன்றக் கூட்டம் தலைவா் வள்ளி தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவா் யூனஸ் பாபு, செயல் அலுவலா் மோசஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பத்திரப் பதிவுகளில் பழைய முறையையே பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும், மகளிா் உரிமைத் தொகை வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் அனைத்து கவுன்சிலா்கள் மற்றும் அலுவலகப் பணியாளா்கள் பங்கேற்றனா்.