நீலகிரி

உதகை, குன்னூரில் பரவலாக மழை

19th Sep 2023 12:00 AM

ADVERTISEMENT


உதகை: நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூா்  மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை பரவலாக பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

உதகை,  குன்னூா்  மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் பகல் நேரத்தில் பலத்த மழை பெய்தது.

சில இடங்களில் மேக மூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் பகல் நேரங்களிலேயே முகப்பு விளக்குகள்  எரிய விட்டவாறு வாகனங்கள் இயக்கப்பட்டன. மழையால் குளிரின் தாக்கமும் அதிகரித்து காணப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT