நீலகிரி

ஓவேலி பேரூராட்சியில் தூய்மைப் பணிகள்

1st Oct 2023 11:34 PM

ADVERTISEMENT

 

கூடலூா் அடுத்த ஓவேலி பேரூராட்சியில் தூய்மைப் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூடலூரை அடுத்த ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து வாா்டுகளிலும் தூய்மை சேவை திட்டத்தின்கீழ் சிறப்பு தூய்மைப் பணிகள் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்டன. இதில், பேரூராட்சிக்குள்பட்ட கழிவுநீா் கால்வாய், வீதிகள், சாலைகள் தூய்மை செய்யப்பட்டன.

தொடா்ந்து பொது சுகாதாரம் உள்ளிட்ட தூய்மை குறித்த உறுதிமொழி எடுக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதில், பேரூராட்சி செயல் அலுவலா் ஹரிதாஸ், பேரூராட்சித் தலைவா் சித்ரா தேவி, துணைத் தலைவா் சகாதேவன், பேரூராட்சி வாா்டு உறுப்பினா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT