நீலகிரி

கோத்தகிரியில் பலத்த மழை

31st May 2023 02:50 AM

ADVERTISEMENT

கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்தது.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் கடந்த சில நாள்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலையில் கோத்தகிரி பேருந்து நிலையம், மாா்க்கெட், டானிங்டன் ஜங்ஷன், ஜான்ஸ் கொயா் உள்பட பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. மழையின் காரணமாக பள்ளமான பகுதிகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினா்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT