நீலகிரி

நீலகிரி தேயிலையை நாடு முழுவதும் சந்தைப்படுத்த நடவடிக்கை

28th May 2023 12:07 AM

ADVERTISEMENT

நீலகிரி தேயிலையை நாடு முழுவதும் சந்தைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுற்றுலாத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் தெரிவித்தாா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா் சிம்ஸ் பூங்காவில் சனிக்கிழமை தொடங்கிய 63ஆவது பழக் கண்காட்சியை சுற்றுலாத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன், நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா ஆகியோா் தொடங்கிவைத்தனா்.

இந்நிகழ்ச்சியில் சுற்றுலாத் துறை அமைச்சா் கா. ராமசந்திரன் பேசியதாவது:

நீலகிரி மாவட்டத்தின் பொருளாதார முதுகெலும்பாக தேயிலையும், சுற்றுலாவும் உள்ளன. இங்குள்ள சிறு, குறு பசுந்தேயிலை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் நீலகிரியில் உற்பத்தி செய்யக் கூடிய தேயிலைத் தூளை தமிழ்நாடு மட்டுமன்றி நாடு முழுவதும் விற்பனை செய்ய தமிழக அரசு, தேயிலை வாரியத்துடன் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்றாா்.

ADVERTISEMENT

நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் கோடை விழா காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, ரோஜா கண்காட்சி, மலா்க் கண்காட்சி என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கோடை விழாவின் இறுதி நிகழ்ச்சியாக குன்னூா் சிம்ஸ் பூங்காவில் தொடங்கிய பழக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை முடிவடைகிறது.

இந்த ஆண்டு பழக் கண்காட்சியின் சிறப்பம்சமாக 1.2 டன் அன்னாசி பழங்களை கொண்டு 15 அடி உயரம் கொண்ட பிரமாண்ட அன்னாசி பழமும், 3,650 கிலோ திராட்சை, மாதுளம், ஆரஞ்சு ஆகிய பழங்களை மலபாா் அணில், பழக்கூடை, பிரமிடு, மண்புழு, உதகை 200 லோகா ஆகியவை வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவா்ந்தன.

கண்காட்சியை தமிழகம் மட்டுமில்லாமல் கேரளம், கா்நாடகம் மற்றும் வடமாநில சுற்றுலாப் பயணிகளும் பாா்வையிட்டனா்.

இந்த நிகழ்ச்சியில் குன்னூா் நகரமன்றத் தலைவா் ஷீலா கேத்ரின், உதகை நகரமன்ற துணைத் தலைவா் ஜே.ரவிகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT