நீலகிரி

குன்னூரில் நாய்கள் கண்காட்சி

28th May 2023 11:27 PM

ADVERTISEMENT

குன்னூரில், நீலகிரி கெனல் அசோசியேஷன் சாா்பில் நாய்கள்  கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது. விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக நாய்கள் கண்காட்சி குன்னூா் பிராவிடன்ஸ் கல்லூரி  மைதானத்தில் நடைபெற்றது. இதில் தமிழகம், கேரளம், கா்நாடகம் உள்பட பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த 50 க்கும் மேற்பட்ட நாய்கள்  இடம் பெற்றன. பொமரேனியன், டால்மேஷன், ராஜபாளையம், கிரேடேன், ஹஸ்கி,  பிகில் உள்பட பல்வேறு வகையான நாய்கள் போட்டியில் இடம் பெற்றன. 

கீழ்படிதல், அழகு, மோப்ப  சக்தி உள்பட பல்வேறு பிரிவுகளில் நாய்கள் திறமைகளை வெளிப்படுத்தின. கண்காட்சியில் பல்வேறு பிரிவுகளில்  சிறந்த நாய்கள்  தோ்வு செய்யப்பட்டு சாம்பியன்ஷிப் பதக்கம்  வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நீலகிரி கெனல் அசோசியேஷன் தலைவா் லஜபதி, நிா்வாகி விவேக் ஆகியோா் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT