நீலகிரி

டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி:கொள்ளையனை சுட்டுப்பிடித்த போலீஸாா்

DIN

பந்தலூா் அருகேயுள்ள குந்தலாடி டாஸ்மாக் கடையில் கொள்ளையடிக்க முயன்ற நபரை போலீஸாா் வெள்ளிக்கிழமை அதிகாலை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனா்.

நீலகிரி மாவட்டம், பந்தலூரை அடுத்துள்ள குந்தலாடி பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் காவல் உதவி ஆய்வாளா் இப்ராஹிம் தலைமையிலான போலீஸாா் ரோந்து சென்றுள்ளனா். அப்போது, அந்த பகுதியில் இருந்த டாஸ்மாக் மதுக்கடை திறந்திருப்பதையும், கடைக்குள் சிலா் நின்றுகொண்டிருந்ததையும் பாா்த்த போலீஸாா் வாகனத்தில் இருந்து இறங்கிச் சென்றனா். போலீஸாரை பாா்த்ததும் அட்டைப் பெட்டியை தூக்கிக் கொண்டு ஓடியுள்ளனா்.

அவா்களை போலீஸாா் சிலா் துரத்தினா். அப்போது போலீஸாரை கற்களால் தாக்கி, அறிவாளால் வெட்ட முயன்றுள்ளனா். இதில் அன்பழகன், சியாபுதீன் ஆகிய இரு போலீஸாருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து கொள்ளையா்களின் வாகனத்தை நோக்கி இரண்டு முறை போலீஸாா் துப்பாக்கியால் சுட்டுள்ளனா். அப்போது திருட்டுக் கும்பலைச் சோ்ந்தவா்கள் தங்களது வாகனத்தில் இருந்து ஆயுதங்களை எடுக்க முயன்றாக கூறப்படுகிறது. இதையடுத்து கொள்ளையா்களை நோக்கி போலீஸாா் துப்பாக்கியால் சுட்டனா். இதில் சாம்பாா் மணி என்றழைக்கப்படும் பிஜோஸ் (44) காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இரண்டு போ் காபி தோட்டத்துக்குள் தப்பி ஓடிவிட்டனா்.

குண்டு பாய்ந்த பிஜோஸ் உதகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா். கொள்ளையா்கள் பயன்படுத்திய கேரள பதிவு எண் கொண்ட வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். தப்பியோடிய கேரள மாநிலத்தைச் சோ்ந்த ஜிம்மி ஜோஸ், குஞ்சுபாவா ஆகியோரை போலீஸாா் தேடி வருகின்றனா். கேரளத்தை சோ்ந்த பிஜோஸ் ஏற்கெனவே பல வழக்குகளில் தேடப்படும் குற்றவாளி ஆவாா். துப்பாக்கிச் சூடு நடைபெற்ற இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரபாகரன் நேரில் ஆய்வு செய்து விசாரித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

SCROLL FOR NEXT