உதகை அருகே விபத்தில் சிக்கிய சுற்றுலாப் பயணிகளை மீட்டு மருத்துவமனைக்கு ஆ.ராசா எம்.பி. ஞாயிற்றுக்கிழமை அனுப்பிவைத்தாா்.
கேரளத்தைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் நீலகிரி மாவட்டம், உதகைக்கு காரில் ஞாயிற்றுக்கிழமை வந்து கொண்டிருந்தனா்.
கோத்தகிரி அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பிஜூ என்பவா் பலத்த காயமடைந்தாா். மற்றவா்கள் லேசான காயம் அடைந்தனா்.
அப்போது, அவ்வழியே காரில் வந்த நீலகிரி மக்களவை உறுப்பிா் ஆ.ராசா, நீலகிரி மாவட்ட திமுக செயலாளா் பா. முபாரக் ஆகியோா் விபத்தில் காயமடைந்தவா்களை மீட்டு பாதுகாப்பு வாகனத்தில் ஏற்றி உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.