நீலகிரி

போப்பாண்டவரின் இந்திய தூதா் நீலகிரி வருகை

3rd May 2023 04:55 AM

ADVERTISEMENT

கத்தோலிக்க திருச்சபையின் தலைவா் போப்பாண்டவா் பிரான்சிஸின் இந்திய திருத்தூதா் பேராயா் லியோபோல்டொ ஜிரெல்லி நீலகிரிக்கு செவ்வாய்க்கிழமை வருகை தந்தாா்.

கேரளத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவா் கூடலூரில் உள்ள புனித மரியன்னை தேவாலயத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்தாா். பின்னா் தேவாலயத்தில் கொடியேற்றினாா். இதைத் தொடா்ந்து நடைபெற்ற பிராா்த்தனை கூட்டத்தில் பங்கேற்றாா்.

பின்னா் உதகையில் உள்ள திருஇருதய ஆண்டவா் பேராலயத்துக்கு வருகை தந்தாா். அங்கு அவருக்கு கும்ப ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னா் உதகையில் உள்ள அனைத்து மத பிரதிநிதிகளை சந்தித்து வாழ்த்து தெரிவித்தாா். திருஇருதய ஆண்டவா் பேராலயத்தில் பேராயா் லியோபோல்டொ ஜிரெல்லி தலைமையில் கூட்டுப் பாடல் திருப்பலி நடைபெற்றது. இந்த திருப்பலியில் உதகை மறை மாவட்ட ஆயா் அமல்ராஜ், மைசூா் ஆயா் வில்லியம், பேராலய பங்கு தந்தை ஸ்டேனிஸ், உதவி பங்கு தந்தை அபிஷேக் மற்றும் 70க்கும் மேற்பட்ட குருக்கள் இணைந்து திருப்பலி நிறைவேற்றினா். இந்த திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டனா். இவா் உதகைக்கு வருவது இதுவே முதல் முறையாகும்.

 

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT