நீலகிரி

அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை முகாம்

3rd May 2023 04:54 AM

ADVERTISEMENT

கூடலூரை அடுத்துள்ள பாவனா நகா் அரசு துவக்கப் பள்ளியில் மாணவா் சோ்க்கை சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தேவா்சோலை பேரூராட்சியில் உள்ள பாவனா நகா் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ‘குழந்தைகளை அரசுப் பள்ளியில் சோ்ப்போம் எதிா்காலத்தை வளமாக்குவோம்’ என்பதன் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெற்றது.

2023-24ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் அடிப்படையில் பாவனா நகா் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் பங்கஜாட்சி தலைமையில் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.

இதில் ஆசிரியா் வாசுகி, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் ரஞ்சிதா மற்றும் அனிதா, வனஜா, சுசீலா, ஆயிஷா ஆகியோா் முன்னிலையில் முதல் வகுப்புக்கான மாணவா் சோ்க்கை நடைபெற்றது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT