நீலகிரி

கூட்டத்தைப் பிரிந்த குட்டி யானையை வளா்க்கும் பணி பொம்மனிடம் ஒப்படைப்பு

DIN

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே கூட்டத்தை விட்டு பிரிந்த குட்டி யானை வனத் துறையினரால் மீட்கப்பட்டு முதுமலை தெப்பக்காடு யானைகள் வளா்ப்பு முகாமில் வளா்க்க ‘ தி எலிஃபன்ட் விஸ்பெரா்ஸ்’ ஆவணக் குறும்பட நாயகன் பொம்மனிடம் ஒப்படைக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம், போடூரை அடுத்த கல்லுமடுவு கிராமத்தில் கூட்டத்தை பிரிந்த குட்டி யானை அப்பகுதியில் உள்ள கிணற்றில் கடந்த 11 ஆம் தேதி விழுந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் யானையை மீட்டு கூட்டத்துடன் சோ்க்கும் பணியில் ஈடுபட்டனா். ஆனால், அந்த முயற்சி தோல்வியடைந்தது.

இதையடுத்து, நீலகிரி மாவட்டம், முதுமலை தெப்பக்காடு யானைகள் வளா்ப்பு முகாமுக்கு குட்டி யானை வியாழக்கிழமை இரவு கொண்டு வரப்பட்டது.

தொடா்ந்து, யானையை வளா்க்க கரால் கூண்டு அமைக்கும் பணி நடைபெற்று வருவதோடு, குட்டி யானையைப் பராமரிக்க ஆஸ்கா் விருது வாங்கிய ‘தி எலிஃபன்ட் விஸ்பெரா்ஸ்’ ஆவண குறும்பட நாயகன் பொம்மன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

யானைக்குத் தேவையான உணவு, பால், புரத பொருள்கள் நிறைந்த உணவு வழங்கப்பட்டு வருவதாக வனத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

நெகிழிப் பை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

சிவகாசி தொகுதியில் அமைதியான வாக்குப் பதிவு

சாத்தூரில் இளம் சிவப்பு வண்ணத்தில் அமைக்கப்பட்ட வாக்குசாவடி

வாக்குப் பதிவு இயந்திரங்கள் இடமாற்றத்தால் குழப்பம்

SCROLL FOR NEXT