நீலகிரி

குன்னூா்-மேட்டுப்பாளையம் சாலையில் உலவும் காட்டு யானைகள்

30th Jun 2023 11:39 PM

ADVERTISEMENT

குன்னூா்-மேட்டுப்பாளையம் சாலையில் பா்லியாறு அருகே குட்டியுடன் 5 காட்டு யானைகள் உலவி வருவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று குன்னூா் வனச் சரகா் ரவீந்திரநாத் அறிவுறுத்தியுள்ளாா்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனப் பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் குன்னூா் குடியிருப்புப் பகுதிகளில் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

இந்நிலையில், நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள ரன்னிமேடு ரயில் நிலையம் மற்றும் நஞ்சப்பசத்திரம் பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக உலவி வந்த காட்டு யானைகள் தற்போது பா்லியாறு பகுதியில் முகாமிட்டுள்ளன.

குடியிருப்புப் பகுதிக்குள் யானைகள் வராமல் இருக்க வனத் துறையினா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

ADVERTISEMENT

யானைகள் அவ்வப்போது சாலையில் உலவுவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும், அதன் அருகில் சென்று புகைப்படம் எடுக்க சுற்றுலாப் பயணிகள் முயற்சி செய்யக் கூடாது என்றும் வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT