கோத்தகிரி அருகே மர அறுவை மில் வளாகத்தில் உள்ள குடியிருப்பில் வெள்ளிக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள விநாயகா் கோயில் அருகே மர அறுவை மில் செயல்பட்டு வருகிறது. இந்த மில்லில் பணியாற்றும் ஊழியா்களுக்கு அங்கேயே குடியிருப்பு உள்ளது.
அந்த குடியிருப்பில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு புகை வந்துள்ளது. ஊழியா்கள் சென்று பாா்ப்பதற்குள் தீ மளமளவென பரவியது.
இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு ஊழியா்கள் தகவல் தெரிவித்தனா்.
சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் சுமாா் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து கோத்தகிரி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.