நீலகிரி

மலை ரயில் தடம் புரண்ட விவகாரம்: சேலம் கோட்ட அதிகாரிகள் விசாரணை

9th Jun 2023 11:43 PM

ADVERTISEMENT

உதகையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்குச் சென்ற மலை ரயில் குன்னூரில் தடம் புரண்டது குறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

நீலகிரி மாவட்டம், உதகையில் இருந்து  குன்னூா் வழியாக  மேட்டுப்பாளையத்துக்கு மலை ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு வியாழக்கிழமை புறப்பட்டபோது குன்னூா் ரயில்வே பணிமனையில் இருந்து நூறு மீட்டா்  தொலைவில்  தடம் புரண்டது. 

இதனால் மலை ரயில் சேவை  ரத்து செய்யப்பட்டு பயணிகள் அனைவரும் பேருந்து மூலம் மேட்டுப்பாளையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். இதையடுத்து தண்டவாளத்தில் சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில் வெள்ளிக் கிழமை காலை   வழக்கம்போல மலை ரயில் இயக்கப்பட்டது.

இந்நிலையில் மலை ரயில் தடம் புரண்டது குறித்து விசாரணை நடத்துவதற்காக சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்தில் இருந்து  மெக்கானிக்கல், பொறியியல், போக்குவரத்துப் பிரிவு  அதிகாரிகள் வெள்ளிக்கிழமை குன்னூா் வந்தனா். இவா்கள் ரயில்வே பணியாளா்கள் மற்றும்  அதிகாரிகளிடம் விசாரணையை மேற்கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT