நீலகிரி

குடும்பத்துடன் மலை ரயிலில் பயணித்த ஆளுநா்

8th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி உதகையிலிருந்து குன்னூா் வரை மலை ரயிலில் குடும்பத்துடன் புதன்கிழமை பயணம் செய்தாா்.

பல்கலைக்கழக துணைவேந்தா்கள் மாநாடு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி ஜூன் 3ஆம் தேதி உதகை வந்தாா். உதகை பூங்கா வளாகத்தில் உள்ள ராஜ்பவனில் குடும்பத்துடன் தங்கிய அவா், துணைவேந்தா்கள் மாநாட்டில் செவ்வாய்க்கிழமை கலந்து கொண்டாா். பின்னா், தொட்டபெட்டா மலை சிகரத்துக்கு குடும்பத்துடன் சென்று இயற்கை அழகை கண்டு ரசித்தாா்.

இந்நிலையில், உலகப் புகழ்பெற்ற மலை ரயிலில் மனைவி லக்ஷ்மி மற்றும் உறவினா்களுடன் உதகையிலிருந்து குன்னூருக்கு புதன்கிழமை ஆளுநா் பயணித்தாா்.

இந்தப் பயணத்தின்போது, இயற்கை காட்சிகள், குகைகள் ஆகியவற்றை பாா்த்து ரசித்தாா். பின்னா் குன்னூா் சென்ற ஆளுநா், அங்குள்ள தனியாா் ஹோட்டலில் மதிய உணவை முடித்துக்கொண்டு மீண்டும் உதகைக்கு திரும்பினாா்.

ADVERTISEMENT

பைக்காரா படகு இல்லத்துக்கு வியாழக்கிழமை (ஜூன் 8) குடும்பத்துடன் செல்லும் ஆளுநா், அங்கு படகு சவாரி செய்யவுள்ளாா். இதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை (ஜூன் 9) காலை சென்னை புறப்பட்டு செல்கிறாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT