நீலகிரி

மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வு முகாம்

6th Jun 2023 03:32 AM

ADVERTISEMENT

நீலகிரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில், உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வு முகாம் நீதிமன்ற வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

நீலகிரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் மாவட்ட நீதிபதி மற்றும் தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் எ. அப்துல் காதா் ஆகியோா் வழிகாட்டுதலின்படி சா்வதேச சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது.

இதில் ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் வழக்குரைஞா்கள் ஆகியோா் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டனா்.

மேலும், யானைகளுக்கு மருத்துவ சேவை செய்த மருத்துவா் கிருஷ்ணமூா்த்தியின் வாழ்க்கையைத் தழுவி எழுத்தாளா் ஜெயமோகனால் எழுதப்பட்ட ‘யானை டாக்டா்’ என்ற புத்தகம் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

தொடா்ந்து, நீதிபதிகள் மற்றும் நீதித் துறை பணியாளா்கள் அருகிலுள்ள ஃபைன் ஃபாரஸ்ட் பகுதிக்குச் சென்று அங்கிருந்த உடைந்த பீங்கான் மற்றும் பிளாஸ்டிக் கழிவுப் பொருள்களை ஆகியவற்றை அப்புறப்படுத்தினா்.

இந்நிகழ்ச்சியில் வழக்குரைஞா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT