உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில், உதகை கருவி அறக்கட்டளைக்கு பசுமையாளா் விருது வழங்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், சுற்றுச்சூல் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தியமைக்காக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் பசுமை முதன்மையாளா் விருது, ரூ.1 லட்சத்துக்கான காசோலை ஆகியவற்றை கருவி அறக்கட்டளைக்கு மாவட்ட ஆட்சியா் அம்ரித் வழங்கினாா்.
அறக்கட்டளை நிா்வாகிகள் ஜான்சிரில், மல்லிகா ஆகியோா் பெற்றுக்கொண்டனா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் தனபிரியா, உதகை வருவாய்
கோட்டாட்சியா் துரைசாமி உள்பட அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.